என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    காட்டுமன்னார்கோவில் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள எய்யலூர் பகுதியை சேர்ந்தவர் ஏழைமுத்து (வயது 51). கூலித் தொழிலாளி.

    இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஏழைமுத்து நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

    தூக்கில் தொங்கி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டும் செல்லும் வழியிலேயே ஏழைமுத்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காட்டுமன்னார் கோவில் போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் சிவராமன் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    தற்கொலை செய்து கொண்ட ஏழை முத்துவுக்கு அழகம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். #tamilnews

    Next Story
    ×