என் மலர்
செய்திகள்

சீர்காழியில் வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்
சீர்காழியில் திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்தது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சீர்காழி:
சீர்காழியை அடுத்த அரூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், தில்லை விடங்கன் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அவர்களின் திருமணம் வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று காலை நடைபெற்றதால் அதில் கலந்து கொள்வதற்காக அரூரிலிருந்து மணமகனின் உறவினர்கள் ஒரு வேனில் சென்றனர். அந்த வேன் சீர்காழி புறவழிச்சாலையில் சென்ற போது நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த ரமேஷ், நீதிமோகன் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. #tamilnews
Next Story






