என் மலர்
செய்திகள்

வீட்டு வரி உயர்வு: பூந்தமல்லி நகராட்சியை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
வீட்டு வரியை உயர்த்திய பூந்தமல்லி நகராட்சியை கண்டித்து குமணன்சாவடி பஸ்நிலையம் அருகே தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாப்பேட்டை:
பூந்தமல்லி நகராட்சியில் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டு வரி உயர்த்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
வீட்டு வரியை உயர்த்திய பூந்தமல்லி நகராட்சியை கண்டித்து இன்று தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று குமணன்சாவடி பஸ்நிலையம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர செயலாளர் பூவை ரவிகுமார் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் சா.மு.நாசர், கிருஷ்ணசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் பூந்தமல்லி நகராட்சியை கண்டித்தும், வீட்டுவரி உயர்வை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். #tamilnews

Next Story