என் மலர்
செய்திகள்

அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை
எந்த அடிப்படையில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டனர் என கேள்வி எழுப்பிய ஐகோர்ட் மதுரை கிளை, அரசின் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மதுரை:
மாவட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பில் வாதிட குற்றவியல் வழக்கறிஞர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலர் முன் அனுபவங்கள் இல்லாதவர்கள் என்றும், நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தமிழக அரசுக்கு பல கேள்விகளை எழுப்பினார். எந்த அடிப்படையில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர், நியமனம் செய்யப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர், நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் எத்தனை வழக்குகளில் வாதாடி உள்ளனர் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும் அவர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாடிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் தமிழக அரசின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தார். #TamilNews

Next Story