என் மலர்

    செய்திகள்

    முசிறியில் பஸ்சில் சென்ற பெண்ணிடம் பணம் கொள்ளை: 2 பேர் கைது
    X

    முசிறியில் பஸ்சில் சென்ற பெண்ணிடம் பணம் கொள்ளை: 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முசிறியில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பணம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    முசிறி:

    முசிறி அருகே உள்ள சேருகுடி ஊராட்சி நாடார் காலனி பகுதியில் வசிப்பவர் லோகாம்பாள்(43). இவர் முசிறிக்கு வந்து சாமான்கள் வாங்கி கொண்டு ஊருக்கு செல்வ தற்காக புதிய பஸ் நிலையத்தில் மேட்டுப் பாளையம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்து ள்ளார்.பஸ் புறப்பட்ட போது அவரது பையில் வைத்திருந்த மணிப்பர்ஸை திடீரென இரண்டு பேர் திருடிக் கொண்டு பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி தப்பி ஓடியுள்ளனர்.

    அதிர்ச்சிய டைந்த லோகாம் பாள் சத்தம் போடவே டிரைவர் பஸ்ஸை நிறுத்தியு ள்ளார்.உடனடி யாக அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் பர்ஸை எடுத்துக் கொண்டு ஓடிய வர்களை துரத்தி பிடித்து ள்ளனர்.மேலும் இருவரையும் பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பர்ஸ்ஸில் ரூ.2 ஆயிரத்து 500 பணம் இருந்துள்ளது. போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்திய போது பர்ஸை திருடியது பெங்களூரை சேர்ந்த ரவி கிருஷ்ணப்பா(57), காரைக்குடியை சேர்ந்த கோபி(23) எனத் தெரிய வந்தது.இது பற்றி லோகாம் பாள் முசிறி இன்ஸ்பெக்டர் ஜெய சித்ராவிடம் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ் பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து இருவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×