என் மலர்
செய்திகள்

பெத்தானியாபுரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரை:
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியைச் சேர்ந்த கந்தசாமி மனைவி கனி (வயது 54). நேற்று மதியம் இவர் பெத்தானியாபுரம், நேதாஜி நகர் டிரான்ஸ்பார்மர் அருகில் நடந்து வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென்று கனி அணிந்திருந்த 13 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் விஜய வாடாவைச் சேர்ந்தவர் ராம்ஜி (வயது 45). இவர் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் காரில் மதுரை வந்தார்.
நேற்று மாலை வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு சாமி கும்பிட சென்று விட்டனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர் கார் கண்ணாடியை உடைத்து 40 கிராம் எடையுள்ள தங்கச்செயின், ரூ. 6 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள் இருந்த கைப்பையை திருடிக் கொண்டு தப்பினார்.
இது குறித்த புகாரின் பேரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.