search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோவில்கள் திறப்பதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
    X

    புத்தாண்டையொட்டி நள்ளிரவில் கோவில்கள் திறப்பதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

    புத்தாண்டை ஒட்டி டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் கோவில்கள் திறப்பதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #HinduTemples
    சென்னை:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுவதாகவும், இதற்கு தடை விதித்து, இரவு நேரத்தில் கோவில்களை திறக்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அஸ்வத்தாமன் என்பவர் பொதுநல மனுவை நேற்று தாக்கல் செய்திருந்தார்.

    ‘சைவ கோவில்கள் சிவராத்திரி அன்றும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்றும் இரவு முழுவதும் திறந்து இருக்க வேண்டும். மற்ற நாட்களில், ஆகம விதிகளின் படி இரவு நேரத்தில் கோவில்களை திறந்து வைக்கக்கூடாது. என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட் நள்ளிரவில் கோவில்கள் திறப்பதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.#HinduTemples
    Next Story
    ×