என் மலர்

    செய்திகள்

    முல்லைபெரியாறு - வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    முல்லைபெரியாறு - வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொடர்ந்து நீர்மட்டம் சரிந்து வருவதால் முல்லை பெரியாறு மற்றும் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    பருவமழை மற்றும் புயலால் மழை பெய்தது. இதனால் முல்லைபெரியாறு மற்றும் வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. ஆனால் தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. இதனால் நீர்வரத்து குறைந்தது.

    இருந்தபோதும் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படவில்லை. உத்தமபாளையத்தில் நடந்த விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தண்ணீர் திறப்பை குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

    தற்போது நீர்வரத்து மிகவும் குறைந்ததால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 700 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று வரை 1200 கனஅடிநீர் திறக்கப்பட்டது. அணைக்கு 284 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 122.30 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டமும் 45.34 அடியாக குறைந்துள்ளது.

    இதனால் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 524கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.50 அடியாக உள்ளது. 17 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணைநீர் மட்டம் 91.34 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×