என் மலர்

  செய்திகள்

  திருப்பூரில் பாரதிய ஜனதா பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது
  X

  திருப்பூரில் பாரதிய ஜனதா பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் பாரதிய ஜனதா பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 6 பேரை தேடி வருகிறார்கள்.
  திருப்பூர்:

  திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் செந்தில் குமார். விறகு வியாபாரம் செய்து வருகிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த 14-ந் தேதி இரவு இவர் மோட்டார் சைக்கிளில் வித்யாலம் பகுதியில் சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் செந்தில் குமார் மீது மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களால் சரமாரி தாக்கினார்கள்.

  அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் கும்பல் தப்பி ஓடி விட்டது. மர்ம கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த செந்தில் குமார் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  விசாரணையில் செந்தில் குமாரை தாக்கியது டையிங் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது.

  ரமேசை பிடித்து போலீசார் விசாரித்த போது விறகு வாங்கியது தொடர்பாக செந்தில் குமாருக்கும் தனக்கும் தகராறு இருந்து வந்தது.

  செந்தில் குமார் தன்னை மிரட்டியதால் தாக்கியதாக தெரிவித்தார். ரமேஷ் உள்பட 9 பேர் செந்தில் குமாரை தாக்கியது தெரிய வந்தது.

  இது தொடர்பாக ரமேஷ், கணேஷ், விக்னேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற 6 பேரை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×