search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரனூர் சிவன் கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம்
    X

    கீரனூர் சிவன் கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம்

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சிவன் கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் சிவன்கோவில் உள்ளது. சிவபெருமானை எதிர்த்து சொற்போர் புரிந்த புலவர் நக்கீரன் இங்கு தவமிருந்ததால் நக்கீரன் என்ற ஊர் தான் தற்போது கீரனூர் என்ற பெயரில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகிலேயே குளம் ஒன்றும் உள்ளது. மேலும் சமீபத்தில் தான் இதில் தூர் வாரப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையில் குளம் நிரம்பி உள்ளது. மேலும் கோவில் சுற்று புறத்தில் உள்ள தெருக்களில் ஓடும் மழைநீர் குளத்தில் சேரும் வகையில் வாரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தெற்கு ரதவீதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள், அடுக்குமாடி வாடகை வீடுகள் மற்றும் வாடகை விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் வரத்துவாரியின் வழியாக கோவில் குளத்தில் சேரும்படி வரத்துவாய்க்காலின் ஒரு பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இதனால் பெருக்கெடுத்து வரும் மழை நீருடன் கழிவு நீரும் கோவில் குளத்தில் சேருகிறது. இதனால் குளத்து நீரின் நிறம் மாறி உள்ளது.

    பண்டிகை காலங்களில் பக்தர்கள் நீராடவும், கோடை காலத்தில் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டு வரும்  இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதை பார்த்து பக்தர்கள், பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். மேலும் இந்த கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×