என் மலர்
செய்திகள்

பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
காளையார்கோவில் அருகே புலியடிதம்மத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
காளையார்கோவில்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டதுடன், விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் கருகிபோனது. இதனால் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் குளறுபடி இருப்பதாகவும், ஏராளமான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் காளையார்கோவில் அருகே உள்ள புலியடிதம்மம் கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.
இந்த நிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து நேற்று புலியடிதம்மத்தில் காளையார்கோவில் ஒன்றிய தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Next Story