என் மலர்

    செய்திகள்

    பேக்கரியில் தகராறு: டீ குடிக்க வந்த வாலிபர்களுக்கு சோடா பாட்டில் அடி- 2 பேர் கைது
    X

    பேக்கரியில் தகராறு: டீ குடிக்க வந்த வாலிபர்களுக்கு சோடா பாட்டில் அடி- 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பூரில் டீ குடிக்க வந்த வாலிபர்களை சோடா பாட்டிலில் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அப்பாச்சி நகரை சேர்ந்தவர் ரஜினி (வயது24). இவர் அங்குள்ள பிரிண்டிங் பட்டறையில் சூப்பர் வைசராக உள்ளார். சம்பத்தன்று இவர் தனது நண்பர் கார்த்திகேயன் (25) என்பவருடன் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள பேக்ரிக்கு டீ குடிக்க சென்றார்.

    அப்போது பிச்சாம் பாளையத்தை சேர்ந்த கார்த்திக்முருகன், மாரிச்செல்வன் ஆகியோரும் டீ குடிக்க வந்தனர். டீ குடித்தபோது ரஜினிக்கும், கார்த்திக்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக்முருகனும், மாரிச்செல்வனும் சேர்ந்து அருகில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து ரஜினி மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயனையும் தாக்கினர்.

    இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பபதிவு செய்து கார்த்திக்முருகன் மற்றும் மாரிச்செல்வன் ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×