என் மலர்

  செய்திகள்

  ராஜபாளையத்தில் நூற்பாலை அதிபர் வீட்டில் கொள்ளை
  X

  ராஜபாளையத்தில் நூற்பாலை அதிபர் வீட்டில் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாளையத்தில் நூற்பாலை உரிமையாளர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் காவலாளியை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
  ராஜபாளையம்:

  ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரமணி. இவர் வீட்டின் அருகே நூற்பாலை நடத்தி வருகிறார். இவர்களது வீட்டின் இரவு காவலாளியாக சத்திரப்பட்டி அய்யனாபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 51) பணியாற்றி வந்தார்.

  இன்று அதிகாலை ஒரு மணி அளவில் பணியில் இருந்தபோது காம்பவுண்டு சுவரை தாண்டி 3 பேர் குதித்துள்ளனர். அவர்கள் வீட்டின் கதவை உடைக்க முயன்றனர்.

  அந்த சத்தம் கேட்டு பழனிச்சாமி டார்ச் லைட்டுடன் விரைந்து வந்தார். அவர் மர்ம மனிதர்கள் மீது டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரை கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த பழனிச்சாமி கீழே விழ கொள்ளையர்கள் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  அப்போது வீட்டுக்குள் இருந்தவர்கள் எழுந்து விட்டனர். இதனால் ஜன்னல் அருகில் இருந்த ரூ.5 ஆயிரத்தை மட்டும் கொள்ளையடித்து விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.

  இதுகுறித்து கீழராஜகுல ராமன் போலீசில் பழனிச்சாமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

  கொள்ளை சம்பவம் தொடர்பாக துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தார். போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அய்யனாபுரம் கார்த்திக் (35), அவரது தம்பி பாண்டி (30), சங்கர்குரு (40) ஆகியோரை கைது செய்தனர்.

  கைதான 3 பேரும் இதுபோல் வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×