என் மலர்
செய்திகள்

வேலூர் அருகே ஆட்டோ-பைக் மோதல்: டியூசன் சென்ற பள்ளி மாணவர் பலி
வேலூர்:
வேலூர் பாகாயம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜான் ஊரிசு பள்ளி அருகே உள்ள ஏசு அழைக்கிறார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இவருடைய மகன் பால்சன் (14) ஓட்டோரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பலவன்சாத்து குப்பத்தில் டியூசன் சென்று வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் டியூசனுக்கு சென்றார்.
இரவு 8 மணிக்கு அவரது நண்பர் ஒருவரின் பைக்கை வாங்கி கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
பைக்கை பால்சன் ஓட்டினார். அவரது நண்பர்கள் ராகுல், சந்தோஷ் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர். பலவன்சாத்து குப்பம் மெயின் ரோட்டில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மீது பைக் நேருக்கு நேர் மோதியது.
பைக்கில் சென்ற மாணவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பாகாயம் போலீசார் அவர்களை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பால்சன் பரிதாபமாக இறந்தார். ராகுல், சந்தோஷ் இருவரும் சி.எம்.சி.ஆஸ்பத்திரிக்கு மாற்றபட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.