என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: குலசேகரன்பட்டிணத்தில் 15செ.மீ மழை கொட்டி தீர்த்தது
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: குலசேகரன்பட்டிணத்தில் 15செ.மீ மழை கொட்டி தீர்த்தது

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை கொட்டி தீர்த்தது. குலசேகரன்பட்டிணம், திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஸ்ரீவைகுண்டத்தில் அதிக மழை பெய்தது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் அளவிற்கு வெயில் வாட்டி வந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்நிலையில் பிசான சாகுபடிக்காக விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி காத்திருந்தனர். இதையடுத்து வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கியது. எனினும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கண்ணாம்பூச்சி காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று காலை வெயில் அடித்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்தது. பின்னர் தொடங்கிய மழை இரவு வரை இடைவிடாது பெய்தது.

    இதனால் நகரின் பலபகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் மழை கொட்டி தீர்த்தது. குலசேகரன்பட்டிணம், திருச்செந்தூர், காயல்பட்டிணம், ஸ்ரீவைகுண்டத்தில் அதிக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குலசேகரன்பட்டிணத்தில் 151 மி.மீட்டர் (15செ.மீ) பெய்தது. மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தாலும் கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் மழை பெய்யவில்லை. தூத்துக்குடியில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    குலசேகரன்பட்டிணம்-151, கயத்தாறு-63, காயல்பட்டிணம்- 84, திருச்செந்தூர்- 86, ஓட்டப்பிடாரம்- 60, மணியாச்சி- 70, கீழஅரசரடி- 40, எட்டயபுரம்- 11, சாத்தான்குளம்- 28.4, ஸ்ரீவைகுண்டம்- 76, தூத்துக்குடி- 25.20, கோவில்பட்டி- 4, கடம்பூர்-5, கழுகுமலை- 5, வேடநத்தம்- 2 என தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 650.20 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
    Next Story
    ×