search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராசிபுரம் நகராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    ராசிபுரம் நகராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

    ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் ஒட்டுமொத்த தூய்மைப்பணியை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் ஒரேநாளில் தூய்மைப்பணியை மேற்கொள்ள ஒட்டுமொத்த தூய்மைப்பணி நேற்று காலையில் தொடங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ராசிபுரம் டவுன் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள மைதானத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பின்னர் கலெக்டர் ஆசியா மரியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் முதல்கட்டமாக ஒட்டுமொத்த தூய்மை பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ராசிபுரத்திலும், இன்று (சனிக்கிழமை) நாமக்கல்லிலும், அதற்கு அடுத்தநாள் திருச்செங்கோட்டிலும் நடக்கிறது. குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் அடுத்தகட்டமாக நடத்தப்படும். இந்த ஒட்டுமொத்த தூய்மைப்பணியில் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மாணவ, மாணவிகள், துப்புரவு பணியாளர்கள் என 1,200 பேர் ஈடுபட்டுள்ளோம். அப்புறப்படுத்த முடியாத குப்பைகள், சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்த 10 வார்டுக்கு ஒரு பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்படும். இந்த பணியின்போது டெங்கு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதற்கு பின்னர் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடப்படும்.

    நாமக்கல் மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 350 முதல் 400 பேர் வரை இருக்கும். அதில் 17 முதல் 20 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 4 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் கூறினார். 
    Next Story
    ×