என் மலர்

    செய்திகள்

    திருப்பாச்சேத்தியில் விவசாயி வெட்டிக்கொலை
    X

    திருப்பாச்சேத்தியில் விவசாயி வெட்டிக்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பாச்சேத்தி பகுதியில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோனைமுத்து (வயது 35), விவசாயி. இவரது மனைவி ஜான்சி ராணி.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜான்சிராணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று சோனைமுத்து மற்றும் அவரது நண்பர்கள் ஆவாரங்காட்டை சேர்ந்த செல்லமுத்து (45), ராமர் (35) ஆகியோர் மது குடித்தனர். அப்போது நண்பர்கள் சோனைமுத்துவிடம் குடும்ப பிரச்சினை குறித்து பேசியதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை வீட்டின் முன்பு சோனைமுத்து அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே திருப்பாச்சேத்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சோனை முத்துவை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் தலைமறைவாகி உள்ள செல்லமுத்து, ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×