என் மலர்
செய்திகள்

வளசரவாக்கம்-ராமாபுரத்தில் கொள்ளையர்கள் 4 பேர் கைது
போரூர்:
வளசரவாக்கம் பகுதியில் செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க உதவி கமிஷனர் சம்பத், மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் குமரன், ஆல்பின்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஆற்காடு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் போரூர் ராமகிருஷ்ணா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்கிற டோரி கார்த்திக், நெசபாக்கம் கானு நகரை சேர்ந்த கார்த்திக் பாண்டியன் என்கிற கோவூர் கார்த்திக் என்பதும் இவர்கள் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 சவரன் நகை, 600 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமாபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த பாலாஜி, ஆவடியை சேர்ந்த நவஹருள் ஆகிய 2 பேரை பிடித்தனர். அவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. அவர்களை போலீசார் கைது செய்து 2 விலை உயர்ந்த லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.






