என் மலர்

  செய்திகள்

  சமயநல்லூர் அருகே டீக்கடைக்காரர் வெட்டிக்கொலை
  X

  சமயநல்லூர் அருகே டீக்கடைக்காரர் வெட்டிக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாடிப்பட்டி அருகே டீக் கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  வாடிப்பட்டி:

  மதுரையை அடுத்த சமயநல்லூர் அருகே உள்ள பரவை முத்துமுனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆங்கன் (வயது54). இவர் பரவை பவர்ஹவுஸ் எதிரே டீக்கடை நடத்தி வந்தார்.

  வழக்கம்போல் நேற்றும் கடையை திறந்தார். நேற்று ஆயுத பூஜை என்பதால் அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது.

  இரவு 7.15 மணி அளவில் சிலர் கடைக்கு டீ குடிக்க வந்தனர். கடைக்குள் ஆங்கன் ரத்த வெள்ளத் தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சமய நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  போலீசார் விரைந்து வந்து ஆங்கன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆங்கனை வெட்டி கொன்றவர்கள் யார்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை.

  இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

  Next Story
  ×