என் மலர்

  செய்திகள்

  வியாசர்பாடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை
  X

  வியாசர்பாடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வியாசர்பாடி அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரம்பூர்:

  வியாசர்பாடி மகாகவி பாரதிநகர் 15வது தெருவை சேர்ந்தவர் கணேசன். மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் (வயது26) இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியில் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

  இதற்கிடையே சுரேஷ் வியாசர்பாடி சாஸ்திரி நகர் 15வது தெருவில் பிணமாக கிடந்தார். அவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட் டிருந்தார். அம்மிக்கல்லை தூக்கி போட்டு முகம் சிதைக்கப்பட்டிருந்தது. இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  எம்.கே.பி. நகர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிணத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். சுரேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  கொலை நடந்த தெருவில் உள்ள விடுகளில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.கொலை நடந்த இடத்தின் அருகில் உள்ள வீட்டில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அதில் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சுரேசை வெட்டிக் கொலை செய்யும் காட்சியும், அம்மிக்கல்லால் முகத்தை சிதைக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.

  இது தொடர்பாக போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வல்லரசு, கோபி, எலி என்கிற சரண் ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது யுவராஜ், சஞ்சய், மதிவாணன் ஆகியோர் தலைமறைவாக இருப்பது தெரிரியவந்தது.

  கொலைசெய்யப்பட்ட சுரேசும், கொலையாளிகள் 6 பேரும் நண்பர்கள். இவர்களில் யுவராஜின் மோட்டார் சைக்கிளை சுரேஷ் வாங்கி அடகு வைத்து செலவழித்தார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சுரேசை நண்பர்கள் 6 பேரும் போன் செய்து வரவழைத்தனர். பின்னர் அவரை அரிவாளால் வெட்டிகொலை செய்தது தெரியவந்தது.

  தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். கொலையுண்ட சுரேஷ் மீது கடந்த 2014-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×