என் மலர்

    செய்திகள்

    கிருமாம்பாக்கம் அருகே விபத்தில்  மூதாட்டி பலி
    X

    கிருமாம்பாக்கம் அருகே விபத்தில் மூதாட்டி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிருமாம்பாக்கம் அருகே விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே கந்தன்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசம்மாள் (வயது 70). இவர் இன்று காலை ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக தனது பேரனுடன் கிருமாம்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அரசம்மாள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அரசம்மாளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசம்மாள் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×