search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் நாதஸ்வர வித்வானை ஏமாற்றி நகை கொள்ளை
    X

    திருவள்ளூரில் நாதஸ்வர வித்வானை ஏமாற்றி நகை கொள்ளை

    திருவள்ளூரில் நாதஸ்வர வித்வானை ஏமாற்றி நகை கொள்ளை நன்கொடை தருவதாக கூறி வாலிபர் துணிகரம்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (27). வீரராகவர் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பவராக உள்ளார்.

    இவரிடம் டிப்டாப் ஆசாமி ஒருவர் அணுகி வீரராகவர் சுவாமியின் வரலாறை கேட்டவாறே, கோயில் குருக்களை அறிமுகப்படுத்த சொல்லி இருக்கிறார். அவரும் அறிமுகப்படுத்திய பிறகு சுவாமிக்கு முத்தங்கியும், தாயாருக்கு சேலையும் காணிக்கை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மேலும் 2 லட்சம் ரூபாய் கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும் என்று கூறியவாறே ஒரு பேப்பரால் சுற்றிய கட்டு ஒன்றை வைத்துள்ளார். இதனால் முத்துக்குமார் அந்த டிப்டாப் ஆசாமியை அழைத்துக் கொண்டு திருவள்ளூரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது கடையில் முத்துக்குமாருக்கு ஜிப்பா ஒன்றை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அவரும் அவர் அணிந்திருந்த ஜிப்பாவை கழற்றும் போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி கீழே விழவே அதை அந்த ஆசாமியிடம் கொடுத்துவிட்டு துணியை மாற்ற சென்றுள்ளார்.

    திரும்பி வந்து பார்த்த போது அந்த ஆசாமி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த முத்துக் குமார் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×