என் மலர்
செய்திகள்

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 8 ஒன்றியங்களில் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல்
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய 8 ஒன்றியங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2016-17ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. தமிழக அரசின் துரித நடவடிக்கையால் ரூ. 80 கோடி நிதி உதவி பெற்று மாவட்டத்தில் வழங்கப்பட்டது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ. 212 கோடி நிதி உதவி பெறப்பட்டு 60 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் கணக்கு எடுத்ததில் ஒருசில தவறுகளால் 19 கோடி கணக்கில் உள்ளது. இவைகள் விரைவில் சரிசெய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இது தவிர நவம்பர் 31-ந்தேதியுடன் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திய 6 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 40 கோடி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வரவேண்டி உள்ளது. விரைவில் அது பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு முன் கூட்டியே விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்வதற்கு நவம்பர் 31-ந்தேதி முடிய இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, கள்ளங்குடி, கல்லல், சாக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஒன்றியங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டு இன்சூரன்ஸ் பணம் கட்ட சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை, வருவாய் துறை ஊழியர்கள் இணைந்து நெல், கரும்பு பயிருக்கு பிரீமியம் செலுத்த வழிகாட்டுவார்கள். இந்த சிறப்பு முகாமை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதே முறையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வாழை பயிரிட்ட விவசாயிகள் இன்சூரன்ஸ் செலுத்த வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதற்குள் பிரீமியம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே வாழை பயிர் பாதிப்பு ஏற்பட்டால் பயிர் காப்பீட்டுத் தொகை பெற முடியும்.
தமிழகத்திலேயே இது வரை மழை அதிகம் பெய்ததில் சிவகங்கை மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. 85 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிட விவசாயிகள் பணிகளை தொடங்கி உள்ளார்கள். பயிர் இன்சூரன்ஸ் தொகை சிவகங்கை மாவட்டத்தில்தான் அதிக தொகையை பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story