என் மலர்

    செய்திகள்

    மாமல்லபுரம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் படுகாயம்
    X

    மாமல்லபுரம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 10 பேர் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாமல்லபுரம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    மாமல்லபுரம்:

    சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கிழக்கு கடற் கரை சாலையில் மாமல்லபுரம் வழியாக அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று சென்னையை நோக்கி அதிவேகத்தில் வந்தது.

    பூஞ்சேரி என்ற இடத்தில் 2 பஸ்களும் வந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் நாகப்பட்டினத்துக்கு சென்ற பஸ் பள்ளத்தில் இறங்கி ஒரு குடிசை மீது மோதி நின்றது. அதேபோல் சென்னை சென்ற புதுச்சேரி பஸ் இடது பக்கத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் 2 பஸ்களில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×