என் மலர்
செய்திகள்

தேனி அருகே அரசு பள்ளியில் துணிகர திருட்டு
தேனி அருகே அரசு பள்ளியில் புகுந்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பூதிபுரம் மஞ்சநாயக்கன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்ததும் பணியாளர்கள் பள்ளியை பூட்டு விட்டு சென்றனர். மறு நாள் காலை வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அறைகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை ராஜலெட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அறையில் இருந்த மடிக்கணினி, யூ.பி.எஸ்., டி.வி.டி. பிளேயர் மற்றும் கம்ப்யூட்டர் உபகரணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியர் கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பழனி செட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story