என் மலர்

  செய்திகள்

  நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  X

  நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
  மேட்டுப்பாளையம்:

  கோவை மாவட்டம் காரமடை வெள்ளியங்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை அமைந்துள்ளது அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடியாகும்.

  கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் பில்லூர் அணை நீர்த்தேக்கப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் அணையின் நீர்மட்ட உயரம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

  நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று (29.08.17) காலை அணைக்கு வினாடிக்கு 10000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது

  அணையின் தண்ணீர் மட்டம் 91.50 அடியாக உயர்ந்தது 2 மெசின்களை மின்சார உற்பத்திக்காக இயக்கிய போது அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வெளியேறியது.

  இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு குறைந்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. அணைக்கு வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது அணையின் தண்ணீர் மட்ட உயரம் மாலை 6 மணி நிலவரப்படி 93.50 அடியாக உயர்ந்தது.

  அணையின் தண்ணீர் மட்ட உயரம் ஒரே சீராக இருக்க அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அணையின் நீர்மட்ட உயரம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×