என் மலர்

    செய்திகள்

    தேவகோட்டை அருகே விபத்தில் பெண் பலி
    X

    தேவகோட்டை அருகே விபத்தில் பெண் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேவகோட்டை அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி:

    தேவகோட்டையில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு தனியார் பஸ் காரைக்குடி நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அமராவதி புதூர் அருகே பஸ் சென்றபோது எதிரே லாரி வந்தது. எதிர் பாராத விதமாக லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    விபத்தின்போது லாரியில் இருந்த பனிப்பு லான்வயல் கிராமத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம் (வயது 52) என்பவர் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.

    மேலும் பஸ்சில் வந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தேவகோட்டை மற்றும் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×