என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
    X

    மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

    உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த விவசாயி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் முத்துவரதன்(வயது 40). விவசாயி. இவர் நேற்று திடீரென்று மதுவில் வி‌ஷத்தை கலந்து குடித்தார். மயங்கி விழுந்த அவரை புதுவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை முத்துவரதன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துவரதன் மனமுடைந்து மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    தற்கொலை செய்து கொண்ட முத்துவரதனுக்கு 2 மகன்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    Next Story
    ×