என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி அருகே தூக்குபோட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
    X

    பவானி அருகே தூக்குபோட்டு வடமாநில வாலிபர் தற்கொலை

    பவானி அருகே பெற்றோர் பணம் கேட்ட தகராறில் வடமாநில வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    அசாம் மாநிலம், நாகான், புரேப்குயிமாரி, பி.எஸ்.கம்பூர் பகுதியை சேர்ந்தவர் பின்டுஹிரா(வயது21). இவர் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சிகோட்டையில் உள்ள ஒரு தனியார் பிராஸசிங் கம்பெனியில் கடந்த 1½ வருடமாக தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பின்டுஹிரா சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    மேலும் பின்டுஹிராவின் பெற்றோர் அவரிடம் பணம் கேட்டதாகவும், இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று பின்டு ஹிரா இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றவர் கம்பெனி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பின்டுஹிரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரச்சலூர் அடுத்த கொமாரபாளையம், சகாயபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது30). லாரி டிரைவர். இவரது மனைவி உஷா.

    சிவகுமாருக்கும், உஷாக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது. சிவகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

    இதனால் சிவகுமார் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து விட்டு பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் தான் வி‌ஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.

    உடனடியாக சிவகுமாரை சிகிச்சைக்காக நத்தக்காடைபூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு வரப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×