என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை திரும்ப பெறும் வரை பா.ம.க. போராட்டம் நடத்தும்: அன்புமணி பேச்சு
    X

    பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை திரும்ப பெறும் வரை பா.ம.க. போராட்டம் நடத்தும்: அன்புமணி பேச்சு

    பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறும் வரை பா.ம.க. போராட்டம் நடத்தும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
    பரங்கிப்பேட்டை:

    பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை எதிர்த்து, கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க சார்பில் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியப்பட்டு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

    கடலூர், நாகை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு சார்பில் பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைய உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த திட்டத்தை நாங்கள் கொண்டுவர விடமாட்டோம்.

    இந்த திட்டத்துக்காக கடலூர், நாகை மாவட்டங்களில் 45 வருவாய் கிராமங்களை தேர்வு செய்து, 57 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, 2 லட்சம் மக்களை அப்புறப்படுத்த உள்ளார்கள். இந்த திட்டம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இந்த திட்டம் ஒரு ஏமாற்றுவேலை. மோசடி திட்டமாகும். இந்த திட்டத்தை 2001-ல் தொடங்கியவர் அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி தான்.

    இந்த திட்டத்தை ரத்துசெய்யும் வரையில் நான் தொடர்ந்து போராடுவேன். இந்த திட்டத்திற்காக இப்பகுதிகளில் இருந்து ஒரு பிடி மண்ணைக்கூட தொடவிடமாட்டேன்.

    தற்போது ஆளும் அ.தி.மு.க.வும், முன்னர் ஆண்ட தி.மு.க.வும் கொள்ளையடிக்கவே இந்த திட்டத்திற்கு துணை போகிறார்கள். இந்த திட்டத்தினால் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 20 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

    மக்களுக்கு எதிரான பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறவேண்டும். இந்த திட்டத்தை எதிர்த்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.

    வருகிற 15-ந்தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் பெட்ரோலிய ரசாயன மண்டல திட்டம் தேவையில்லை என்று ஒருமனதாக முதல் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார். 
    Next Story
    ×