என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளில் கூடுதலாக 15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை: தங்கமணி பேட்டி
    X

    தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளில் கூடுதலாக 15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை: தங்கமணி பேட்டி

    தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளில் மின்மிகை மாநிலம் ஆக்கும் முயற்சியாக கூடுதலாக 15 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு சூளையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை இன்று அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் கழிவுநீர் பிரச்சனை உள்ளது. இதற்காக இந்த மாவட்டங்களில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

    அதன்படி ஈரோடு சூளையில் தற்போது சாக்கடையில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் சோதனை அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை பேரில் இன்று நான் பார்வையிட வந்துள்ளேன். இங்கிருந்து சுத்திகரிக்கப்படும் நீரை மரம், செடி கொடிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் லீட்டர் தண்ணீர் கழிவுநீர் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் எந்திரம் இங்கு வர உள்ளது.

    தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளில் மின்மிகை மாநிலம் ஆக்கும் முயற்சியாக கூடுதலாக 15 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.பி.செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க் கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×