என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் நடக்க உள்ள மனித சங்கிலியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
    X

    ஈரோட்டில் நடக்க உள்ள மனித சங்கிலியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    ஈரோட்டில் விரைவில் நடக்க உள்ள தி.மு.க.மனித சங்கிலி போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என ஈரோடு தி.மு.க.நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் நாட்டில் நேற்று தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

    சேலத்தில் நடக்க இருந்த மனித சங்கிலியில் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது.

    இதில் பங்கேற்க ஸ்டாலின் வந்த போது கோவை கனியூரில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்ததை யொட்டி சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதனால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மு.க.ஸ்டாலின் கூறும் போது, “சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் மறியல் போராட்டத்தால் தி.மு.க.வினர் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த 3 மாவட்டங்களிலும் மனித சங்கிலி நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டொரு நாளில் தேதி அறிவிக்கப்பட்டு மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இதில் நானும் பங்கேற்பேன்” என்று கூறினார்.

    இதையொட்டி ஈரோட்டில் விரைவில் நடக்க உள்ள தி.மு.க.மனித சங்கிலியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என ஈரோடு தி.மு.க.நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறியதாவது.-

    சேலம், நாமக்கல்,ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் அடுத்தடுத்து இருப்பதால் 3 மாவட்டங்களில் நடக்கும் மனித சங்கிலியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது உறுதி.

    ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் அண்ணா முழு உருவச்சிலை அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.இதனை மு.க.ஸ்டாலின் மனித சங்கிலி நிகழ்ச்சியின் போது பார்வையிடுவார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×