என் மலர்

  செய்திகள்

  ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவருக்கு டெங்கு காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
  X

  ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவருக்கு டெங்கு காய்ச்சல்: அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை தொடர்ந்து அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  சிங்காரப்பேட்டை:

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொட்டுகாரன்பட்டி கிராமத்தில் சுமார் 500 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிப்பவர் திருவேங்கடம். இவரது மகன் சதீஷ்குமார் (22) கல்லூரி மாணவர். கடந்த ஒருவார காலமாக காய்ச்சலினால் அவதிபட்டு வந்துள்ளார்.

  இவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

  பின்னர் அவர் தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் ரத்த சோதனை மேற்கொண்டார். முடிவில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.

  இதனையடுத்து அவர் மீண்டும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். அவர் தர்போது நலமுடன் இருப்பதாக கூறுகிறார்.

  மேலும் அவர் வசிக்கும் இந்த கிராம பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். மருத்துவ முகாம் அமைத்து இது போன்ற காய்ச்சல்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  Next Story
  ×