என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைப்புசாரா-கட்டுமான நல வாரிய உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: கலெக்டர்
    X

    அமைப்புசாரா-கட்டுமான நல வாரிய உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: கலெக்டர்

    அமைப்புசாரா மற்றும் கட்டுமான நல வாரிய உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    மாநில அளவில் 17 நலவாரியங்களில் சுமார் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

    அரசின் நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் உறுப்பினர்கள் அனைவரும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தங்களது உறுப்பினர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணையும் அவசியம் பதிவு செய்ய வேண்டும்.

    எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா மற்றும் கட்டுமான நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தங்களது பதிவு அடையாள அட்டை நகலுடன் ஆதார் அடையாள அட்டை நகலையும் வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் காஞ்சீபுரம் ரங்கசாமிகுளம் அருகில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் இதுகுறித்து 044-27230279 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×