என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தமிழ்நாட்டில் டெங்கு பரவுகிறது - 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
By
மாலை மலர்11 July 2017 6:46 AM GMT (Updated: 11 July 2017 6:46 AM GMT)

இந்தியாவிலேயே டெங்கு அதிகம் பாதித்த 2-வது மாநிலமாக இந்த ஆண்டு தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை 4-ந்தேதி வரை 4407 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஏ.டி.எஸ். கொசுகளுக்கு ஆளாகி அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. குடிநீருக்காக தண்ணீரை சேமித்து வைப்பதில் இருந்தும், மூடப்படாத குடிநீர் தொட்டிகளில் இருந்தும் கொசுக்கள் வெளியாகி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த மாதம் முதல் ஜூலை முதல் வாரம் வரை காய்ச்சல் பாதித்த குழந்தைகள் அதிகளவு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அலைந்து திரிகின்ற இந்த வேளையில்தான் டெங்கு வைரஸ் அதிகளவு பரவி வருகிறது.
பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய இவ்வகை கொசுக்கள் சென்னை நகரத்தில் மட்டுமின்றி பெரும்பாலான நகரங்களில் அதிகளவு உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் டெங்கு பாதிப்பு அதிகளவு உள்ளது. அங்கிருந்து தமிழக பகுதிக்கு பரவக்கூடும் என்பதால் தடுப்பு நடவடிக்கை எடுத்த போதிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவிலேயே டெங்கு அதிகம் பாதித்த 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை 4-ந்தேதி வரை 4407 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டிற்கு பிறகு அதிகளவு டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. 2014, 2015, 2016 ஆண்டுகளில் டெங்குவின் தாக்கம் குறைந்த போதிலும் இந்த வருடம் அதிகரித்துள்ளது பொது சுகாதாரத்துக்கு சவாலாக உள்ளது.
ஆண்டு நிறைவு பெற இன்னும் 6 மாதங்கள் இருக்கின்ற நிலையில் 4407 பேர் இதுவரையில் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது சுகாதாரத் துறை கவலை அடைய செய்துள்ளது.
2012-ம் ஆண்டுதான் மிக அதிகளவு டெங்கு பாதித்துள்ளது. 12,826 பேர் இந்நோயால் பாதிப்படைந்தனர். அதன் பின்னர் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இந்த வருடம் அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:-
டெங்கு குறித்து பொதுமக்கள் இடையே மேலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இந்த வருடம் மேலும் அதிகப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறி பற்றி விளக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மாணவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் பாதிப்பை தடுக்க முடியும். மேலும் தண்ணீர் தேங்குகின்ற பகுதிகளை கண்டறிந்து அவற்றை சுத்தம் செய்தால் சாக்கடை நீர் தேங்காமல் வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கை மூலம் கொசு உற்பத்தியை தடுக்க முடியும்” என்றார்.

Next Story
×