என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
    X

    கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

    மயிலாடுதுறை அருகே கொலை மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் மகேஷ் என்கிற மகேந்திரன். இவர் மீது கொலை, மற்றும் கடை வீதியில் பணம் கேட்டு மிரட்டிய  வழக்குகள் உள்ளது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாகை கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

    அதன்படி செம்பனார் கோவில் போலீசார் மகேசை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இது பற்றிய தகவல் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×