என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம்
    X

    குத்தாலத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம்

    நாகை மாவட்டம் குத்தாலத்தில் சொகுசு கார் விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
    குத்தாலம்:

    சென்னை தி.நகரை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி(58). கனரா வங்கியில் மேலாளராக உள்ளார். இவர் நேற்று தனது சகோதரரின் சஷ்டியப்த பூர்த்தி (60-ம் கல்யாணம்) விழாவிற்காக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்தினருடன், காரில் வந்துள்ளார்.

    விசேஷம் முடிந்து திருக்கடையூரிலிருந்து புறப்பட்டு குத்தாலம் ஓ.என்.ஜி.சி. அருகில் வரும் போது, கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற சாலையில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ஈஸ்வர மூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த குத்தாலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலைய அலுவலர் வீரராகவன், தீயணைப்பு படை வீரர்கள் ஜோதி, ரமேஷ், சரவணன், ஏழுமலை, செந்தில் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி பெற்ற அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    Next Story
    ×