என் மலர்

  செய்திகள்

  சோழவந்தானில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
  X

  சோழவந்தானில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவந்தானில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

  சோழவந்தான்:

  சோழவந்தானில் உள்ள அரசு டெப்போவுக்கு சொந்தமான பஸ் நேற்று நள்ளிரவில் “டிரிப்” முடிந்து வந்து கொண்டிருந்தது. பஸ்சை அருண்ராஜா ஓட்டினார். கண்டக்டர் அருண்குமாரும் பஸ்சில் இருந்தார்.

  மாரியம்மன் கோவில் அருகில் பஸ் வந்தபோது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, 4 வாலிபர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அனைவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

  4 வாலிபர்களும், மோட்டார் சைக்கிளை எடுக்க மறுத்ததுடன் பஸ்சுக்கு வழிவிடாமல் தகராறு செய்தனர். இந்த தாக்குதலில் டிரைவரின் கையை கடித்தனர். கண்டக்டருக்கும் அடி-உதை விழுந்தது.

  இது பற்றி டெப்போ மேலாளர் திருமலை வாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், சோழவந்தான் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அரசு பஸ் டிரைவர்- கண்டக்டரை தாக்கிய முதலியார்கோட்டை வைரம் மகன் சந்திரன் (21), அய்யவார் தெரு கருப்பு மகன் தவமணி (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×