என் மலர்
செய்திகள்

திருமங்கலம் அருகே விபத்து: கணவன்-மனைவி பலி
பேரையூர்:
திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 60). இவரது மனைவி ஜோதி (52). இவர்கள் திருமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று சென்றனர். மாலையில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
திருமங்கலம் பஸ் நிலையம் முன்பு வந்த போது, தேனியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜோதி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோதி பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக் குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் சுரேசை கைது செய்தனர்.