search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து விதிமீறல்: 8 ஆயிரத்து 259 பேருக்கு ரூ.13 லட்சம் அபராதம் - போலீசார் நடவடிக்கை
    X

    போக்குவரத்து விதிமீறல்: 8 ஆயிரத்து 259 பேருக்கு ரூ.13 லட்சம் அபராதம் - போலீசார் நடவடிக்கை

    சென்னையில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 8 ஆயிரத்து 259 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 8 ஆயிரத்து 259 வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.13 லட்சத்து 37 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 494 பேரும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 3 ஆயிரத்து 720 பேரும், அதிவேகமான வாகனங்களை ஓட்டிய 2 ஆயிரத்து 346 பேர் மீதும், தாறுமாறாக வாகனங்களை ஓட்டிய 355 பேரும் பிடிபட்டனர்.

    3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றதாக 1,103 பேரும், லைசென்சு இல்லாமல் வாகனத்தை ஓட்டிய 241 பேரும் சிக்கினர். வார இறுதி நாட்களான 30 மற்றும் 1 ஆகிய 2 நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 171 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற 1,020 பேர் மீதும், அதிவேகமாகவும், தாறுமாறாக வாகனம் ஓட்டிய 716 பேர் மீதும், 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றதாக 318 பேர் மீதும், லைசென்சு இல்லாமல் வாகனத்தை ஓட்டிய 64 பேர் மீதும் என மொத்தம் 2 ஆயிரத்து 289 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×