என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை
    X

    கோபி அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை

    கோபி அருகே தூக்கு போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி அடுத்த கடத்தூர் இந்திர நகர், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி.இவரது மனைவி இந்திராணி (வயது 31). இவர் களுக்கு ஜோதி பிரவின்(12), சபரி (10) என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்திராணிக்கு 6 வருடத் திற்கு முன் மனநிலை பாதிக் கப்பட்டது. அதற்காக அவர் தந்தை வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று இந்திராணி வீட்டின் ஒரு அறையில் சேலையை கழுத்தில் மாட்டி தூக்கு போட முயன்றார். இதை கவனித்த இந்திராணியின் உறவினர் ஒருவர் சத்தம் போட்டுள்ளார்.

    உறவினர் சத்தம் கேட்டு அங்கு குணசேகரன் என்பவர் ஒரு ஏணி மூலம் ஓட்டை பிரித்து வீட்டின் உள்ளே இறங்கி இந்திராணி கழுத்தில் இருந்த புடவையை எடுத்து விட்டு இந்திராணியை மீட் டார்.

    இந்திராணியை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச் சைக்காக இந்திராணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இந்திராணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×