என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம்: படப்பையில் 1-ந்தேதி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
By
மாலை மலர்20 Jun 2017 10:42 AM GMT (Updated: 20 Jun 2017 10:42 AM GMT)

கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் வருகிற 1-ந்தேதி படப்பையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
சென்னை:
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் குன்றத்தூரில் அவைத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. வரவேற்றார். துணைச் செயலாளர்கள் விசுவநாதன், அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர் சேகர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேசினார். அவர் கூறியதாவது:-
தமிழர்களின் தன்னிகரில்லா தலைவர் நம் நெஞ்சம் நிறைந்த தலைவர் கலைஞரின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழாவை முன்னிட்டு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குன்றத்தூர் ஒன்றியம், படப்பை கரசங்கால், அண்ணா திடலில் வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கழக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுச்சியுரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டம் மாபெரும் மாநாடு போல நடத்திடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் படப்பை மனோகரன், தண்டபாணி, சண்முகம், வே.கருணாநிதி, நரேந்திரன், ஜெயக்குமார் உள்பட பலர் பேசினார்கள்.

Next Story
×