என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதல் விவகாரம்: மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது
    X

    கள்ளக்காதல் விவகாரம்: மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது

    கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவியை அடித்து கொன்ற கணவரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர்.
    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணை, துளிக்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல் முருகன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஈஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த வேல்முருகன் மனைவியை கண்டித்தார். ஆனால் ஈஸ்வரி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து தொடர்ந்து கள்ளக்காதலனுடன் பழகி வந்தார்.

    இது தொடர்பாக நேற்று மாலை வேல்முருகன்- ஈஸ்வரி இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த வேல்முருகன் கல்லால் ஈஸ்வரியின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வேல் முருகனை கைது செய்தனர்.

    Next Story
    ×