என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: 2 பேர் கைது
காரைக்குடியில் கூடுதல் விலைக்கு மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
மதுரை தெற்குவாசல் மஞ்சணக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 36) கட்டிட தொழிலாளி. இவர், தற்போது காரைக்குடியில் தங்கி பணி செய்து வருகிறார்.
நேற்று இவர் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 4 ரோடு சந்திப்பு பகுதிக்கு மது அருந்த சென்றார். அங்கு அனுமதியின்றி சிலர் மது விற்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ராஜா மது கேட்டபோது அதிக விலை கூறினர்.
இதுகுறித்து அவர் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தாக காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளவேனில் விசாரணை நடத்தி கூடுதல் விலைக்கு மது விற்றதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக வாகானுரைச் சேர்ந்த ரகுபதி (27), கொடுங்குளம் இளையராஜா (28) ஆகியோரை கைது செய்தார். மேலும் புதுக்குறிச்சியை சேர்ந்த விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






