என் மலர்
செய்திகள்

மதுக்கடையை சுற்றி தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
பொதுமக்கள் போராட்டம் எதிரொலி - மதுக்கடையை சுற்றி தடுப்புகள் அமைப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் அருகே செயல்படும் மதுக்கடைகள் எதிராக போராட்டம் தீவிரமானதால், பொதுமக்கள் மதுக்கடையை நெருங்காமல் இருக்க மதுக்கடையை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு, முத்தம்பாளையம், கருங்கல் பாளையம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.
இந்த மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனினும் அந்த மதுக்கடைகள் பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது.
கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் அருகே செயல்படும் மதுக்கடைகள் எதிராக பொதுமக்களின் போராட்டம் தீவிரமாக உள்ளது.
2 நாட்களாக அவர்களது போராட்டம் நீடித்தது. இதன் காரணமாக மதுக்கடைக்கும், மதுக்கடைக்கு வரும் குடிமகன்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே போராட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் மதுக்கடையை நெருங்காமல் இருக்க அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
கோவில் விழாக்கள், அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களில் பாதுகாப்புக்காக கம்புகளால் தடுப்புகள் அமைப்பதுபோல மதுக்கடையை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தடுப்புகளை மதுக்கடையை சுற்றி 100 அடி சுற்றளவுக்கு அமைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.

Next Story