என் மலர்tooltip icon

    செய்திகள்

    பு.புளியம்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள்
    X

    பு.புளியம்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள்

    பு.புளியம்பட்டி அருகே கத்திமுனையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    பு.புளியம்பட்டி அருகே உள்ள காரப்பாடி தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபா (வயது 32).

    இவர் தொட்டிபாளையம் பகுதியில் திருமண வீட்டுக்கு போய்விட்டு இரவு 10.30 மணியளவில் நடந்துசென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் தீபாவை வழிமறித்தனர்.

    பிறகு கத்தி முனையில் மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் காலில் அணிந்திருந்த கொலுசையும் பறித்து சென்று தப்பிவிட்டனர்.

    இதேபோல் அதே பகுதியில் செண்பகப்புதூரை சேர்ந்த ஜெயமணி (40) என்ற பெண்ணும் ஒரு திருமணத்துக்கு சென்று விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் அவரிடமும் காதில் அணிந்திருந்த கம்மலை மிரட்டி அபகரித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இப்படி அடுத்தடுத்து நடந்த 2 சம்பவம் குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×