என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது
குத்தாலம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாராயம் விற்ற 5 பேரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரிசங்கர் மற்றும் போலீசார் செம்பியன்கோமல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாதாகோவில் தெருவைச் சேர்ந்த அபூர்வசாமி (வயது 50), சுந்தரமூர்த்தி(வயது 38), தெற்கு தெருவைச் சேர்ந்த ரெத்தினசாமி மகன் ஜெயராமன்(வயது 52), மெயின் ரோட்டைச் சேர்ந்த ஜார்ஜ்(வயது 50) ஆகிய 4 பேரும் அவரவர் வீட்டின் அருகே புதுவை மாநில சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அங்கு விற்பனைக்கு வைத்திருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் சிவனாகரம் கிராமம் புதுத்தெருவில் தனது வீட்டின் அருகே புதுவை மாநில சாராயம் விற்பனை செய்த சீனிவாசன் மகன் சிவராமன் (வயது 28) என்பவரையும் கைது செய்தனர்.

Next Story