என் மலர்
செய்திகள்

தேனி அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது
தேனி அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனால் பல கிராமங்களில் மொத்தமாக மது பாட்டில்கள் வாங்கி விற்பனை செய்யப்படுகிறது.
தேனி அருகில் உள்ள அல்லிநகரம் அழகர்சாமி காலனியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது 38). இவர் சம்பவத்தன்று ஒரு ஆட்டோவில் அதிகளவு மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு சென்றார்.
அப்போது ரோந்து பணியில் இருந்த அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியம் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது பாண்டித்துரை வெளிமார்க்கெட்டில் மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் பாண்டித்துரையை கைது செய்தனர். ஆட்டோவில் இருந்த 612 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.53 ஆயிரம் ஆகும்.
Next Story