என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மண்பானைகளை சுமந்தவாறு பொதுமக்கள் போராட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, மண்பானைகளை தலையில் சுமந்தவாறு நெடுவாசல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் 2-வது கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அதன்படி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களில் நெடுவாசல் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 27-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகி குடிநீருக்கு கையேந்தும் நிலை ஏற்படும் என்பதை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, காலி மண்பானைகளை பொதுமக்கள் சுமந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது:- ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்கள் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து விவசாயம் அழிந்துவிடும். இதனால், இந்த திட்டம் வேண்டாம் என்று திட்டம் அறவிக்கப்பட்ட நாளில் இருந்து போராடி வருகிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. மேலும், தமிழக அரசும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது. எங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை காக்க நாங்கள் போராடி மடியவும் தயாராக உள்ளோம். ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட்டால் குடிநீருக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை அரசுக்கு தெரியப்படுத்தவே மண் பானைகளை சுமந்து போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.

Next Story