search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாரமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் மீது தாக்குதல்: தந்தை மீது கர்ப்பிணி பெண் புகார்
    X

    தாரமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் மீது தாக்குதல்: தந்தை மீது கர்ப்பிணி பெண் புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தாரமங்கலம் அருகே காதல் திருமணம் செய்த கணவர் மீது தாக்குதல் நடத்திய தந்தை மற்றும் உறவினர்கள் மீது கர்ப்பிணி பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அலாக்கவுண்டர் என்பவரின் மகன் மணி (26). இவர் சின்னப்பம்பட்டியில் மினி ஆட்டோவை சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்த நிலையில் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் சந்தியா (20) இவர் திருச்செங்கோடு பகுதியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

    அப்போது இவர்கள் திருமணம் செய்து கொண்டு சின்னப்பம்பட்டி பகுதியில் குடியிருக்க கூடாது என்று சந்தியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனால் இளம்பிள்ளை பகுதியில் தற்போது மணி, சந்தியாவுடன் தனியாக குடியிருந்து வந்தார். தற்போது சந்தியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் கர்ப்பிணி மனைவி சந்தியாவுக்கு இரும்பு கட்டில் வாங்குவதற்காக மணி தனது மினி ஆட்டோவை எடுத்து கொண்டு சின்னப்பம்பட்டிக்கு வந்ததாக தெரிகிறது. இதையறிந்த சந்தியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து வந்து மணியை சின்னப்பம்பட்டி பகுதிக்கு வரக்கூடாது என்று பல முறை கூறியும் மீண்டும் வருகிறாயா? என்று கூறி அடித்து உள்ளனர்.

    இதில் காயம் அடைந்த மணியை அவரது உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும் இது குறித்து சந்தியா கூறியதாவது:-

    நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்ற ஒரே காரணத்திற்காக எனது அப்பா மற்றும் உறவினர்கள் எங்கு பார்த்தாலும் எனது கணவரை அடித்து உதைத்து வருகின்றனர்.

    இது குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது அப்பா பணம் வசதி படைத்தவர் என்பதால் அடியாட்களை கொண்டு அவ்வப்போது தாக்கி வருகிறார்.

    இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது கணவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×